இங்கிலாந்து வீரரை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப். 
செய்திகள்

அறிமுகப் போட்டி: இங்கிலாந்தின் 3 டாப் ஆர்டர்களை வீழ்த்திய ஆகாஷ் தீப்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தி வருகிறார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அசத்தி வருகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன்பின் இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்தப் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது அறிமுகப் போட்டியிலேயே இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்டர்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

முதல் ஸ்பெல்லில் 7 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இவர் ஐபிஎல்-இல் ஆர்சிபி அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 112/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஆகாஷ் தீப் 3, அஸ்வின் 1, ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT