இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்காக இங்கிலாந்து வெட்கப்பட தேவையில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான மன உறுதிகொண்ட இந்திய அணி உண்மையில் இந்த வெற்றிக்கு தகுதியானவர்களே எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தத் தொடர் முழுவதும் அணியில் மூத்த வீரர்கள் பலர் இல்லாமல் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. உண்மையில் இந்த வெற்றிக்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும். இந்திய அணியின் திறமைக்காக மட்டுமின்றி அவர்களது மன வலிமைக்காவும் அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
அவர்கள் சொந்த மண்ணில் படைத்துள்ள சாதனை மிகப் பெரியது. அதனை இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் மீண்டும் தொடர்கின்றனர். இத்தகைய இந்திய அணியிடம் தோற்றதில் இங்கிலாந்து வெட்கப்படத் தேவையில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.