செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். 

DIN

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர்(37). துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் வார்னர், 161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ளார். 

இருப்பினும் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள வார்னர் ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதிரடி வீரர் வார்னரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT