செய்திகள்

கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்!

கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 

DIN

கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரான் பான்கிராஃப்ட் ஆகிய வீரர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில், கேப்டனாக செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து நான் நகர்ந்து வந்துவிட்டேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விவகாரத்தை திரும்பிப் பார்த்தால், அதனை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் எனத் தோன்றியது. ஆனால், அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினால் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவில் எனக்கு மகிழ்ச்சிதான். ஐபிஎல் போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எனக்கு தோன்றுகிற விஷயம் என்னவென்றால், கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பொறுப்பு என்பது வெறும் பேட்ஜ்களை அணிந்து கொள்வது மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை அணியில் நான் என்னவாக இருந்தாலும் என்னுள் தலைமைப் பண்பு உள்ளது. அதற்கு நமது பெயருக்குப் பின்னால் கேப்டன் அல்லது துணைக் கேப்டன் பதவியின் பெயர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT