செய்திகள்

சிட்னி செல்வதற்கான விமானத்தை தவறவிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குநர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இணைவதற்கான சிட்னி செல்லும் விமானத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் தவறவிட்டுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இணைவதற்கான சிட்னி செல்லும் விமானத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் தவறவிட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 3) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இணைவதற்காக அவரது மனைவியுடன் விமானம் நிலையம் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் சிட்னி செல்லும் விமானத்தை தவறவிட்டார்.

விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தததால் முகமது ஹபீஸ் மற்றும் அவரது மனைவிக்கு சிட்னி செல்லும் விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சில மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பிறகு சிட்னி செல்லும் அடுத்த விமானத்தில் அவர்கள் புறப்பட்டனர். 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

SCROLL FOR NEXT