செய்திகள்

14 மாதங்களுக்குப் பிறகு டி20 அணியில் ரோஹித், விராட் கோலி; டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 7) அறிவித்துள்ளது.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 7) அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 7) ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பியுள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தனர். அதன்பின், தற்போது அவர்கள் அணியில் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.

போட்டிகள் விவரம்

முதல் டி20 - ஜனவரி 11 - மொஹாலி
2-வது டி20 - ஜனவரி 14 - இந்தூர்
3-வது டி20 - ஜனவரி 17 - பெங்களூரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தேன் சொல்கிறேன் செய்கிறேன்... சமந்தா!

அறிமுகம் தேவையில்லை... சாக்‌ஷி அகர்வால்!

வெய்யிலைத் தேடிச் சென்றால் மழை... ஆம்னா ஷரீப்!

மூன்று ரோஜாக்கள்... தீப்ஷிகா!

பச்சைக் குயில்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT