செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற வேண்டும்: சௌரவ் கங்குலி

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20  உலகக் கோப்பை இந்த ஆண்டு ஜூனில்  அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துடன் விளையாடுகிறது. அதன்பின் தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடைசியாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 14 மாதங்கள் ஆகின்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெறுவார்களா எனவும் தெரியவில்லை. 

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த வேண்டும். இந்திய அணியில் விராட் கோலியும் இடம்பெற வேண்டும். விராட் கோலி மிகச் சிறந்த வீரர். 14 மாதங்களுக்குப் பிறகு அவர் அணியில் இடம்பெற்றாலும், அதனால் அவரது ஆட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெஸ்வால் சிறப்பாக விளையாடினார். ஜெய்ஸ்வால் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தில் உள்ளார். அவருக்கு போதுமான அளவுகள் வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட விமர்சனங்கள் பல வரும். இந்தியா வலிமையான அணி. அவர்கள் விளையாடியிருக்கும் விதத்தினைப் பாருங்கள்.  ஒருநாள் தொடரை வென்றுள்ளார்கள். டி20 மற்றும் டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

SCROLL FOR NEXT