முதல் டி20 போட்டியில் விராட் கோலி இல்லை!
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாடவில்லை.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாடவில்லை.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: ரஷித் கான் அணியில் இல்லாததை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: ஆப்கன் பயிற்சியாளர்
14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியுடன் இணைந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 14 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 அணியில் இணைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.