முகப்பு
செய்திகள்

நைஸ் விடியோ மச்சான்: தமிழில் பேசி அசத்திய கான்வே! (வைரல் விடியோ)

சிஎஸ்கே அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தமிழில் பேசிய விடியோ வைரலாகியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
படம்: எக்ஸ்
பகிர்:

நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டெவான் கான்வே ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் கான்வே கடந்தாண்டு 16 போட்டிகளில் 672 ரன்கள் அடித்து அசத்தினார். 

சிஎஸ்கே அணியில் எந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடினாலும் தமிழ்நாட்டு ரசிகர்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்கள். 

பாகிஸ்தான் டி20 தொடரில் பங்கேற்ற சிஎஸ்கே ரசிகர் ஒருவர் கான்வேயிடம் கையெழுத்து வாங்கும்போது கான்வே “நைஸ் விடியோ மச்சான். விசில் போடு” என தமிழில் பேசி அசத்தியுள்ளார். 

இதனை படம் பிடித்த ரசிகர் உள்பட சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →