செய்திகள்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலவசமாகக் காணலாம்! எதில்?

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரை பிரபல ஓடிடியில் இலவசமாகக் காணலாம்.

DIN

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜன.19 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது. இத்தொடரில் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றனர். நடப்பு சாம்பியனான இந்தியா தன் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியைச் சந்திக்கிறது.

இத்தொடரில், அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். 23 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும்.

இதில், 5 முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாகக் காணலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான இறுதிப்போட்டியில் 7 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததால் ஹாட்ஸ்டார் நிறுவனம் வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT