செய்திகள்

கடைசி டி20: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி, மாட் ஹென்றி, லோகி ஃபெர்க்யூசன் மற்றும் ஈஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிளன் பிளிப்ஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஃப்திகார் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷகின் அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஸாமன் கான் மற்றும் உஸாமா மிர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

ஏற்கனவே நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

இஃப்திகார் அகமது ஆட்டநாயகனாகவும், ஃபின் ஆலன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

அல்லிப்பூ... மாதுரி ஜெயின்!

SCROLL FOR NEXT