செய்திகள்

2-வது டெஸ்ட்: முதல் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் 266 ரன்கள் குவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 8  விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 8  விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று (ஜனவரி 25) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில்  அதிகபட்சமாக ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து காவெம் ஹாட்ஜ் 71 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

கெவின் சின்க்ளேர் 16 ரன்களுடன் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT