செய்திகள்

தேநீர் இடைவேளை: வலுவான நிலையில் மே.இ.தீவுகள்! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 

2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஷுவா டி சில்வா 79, கவேம் ஹோட்ஜ் 71, கெவின் சின்க்ளைர் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். 

அடுத்து ஆடிய ஆஸி. அணி தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ஸ்மித் 6, லபுஷேன் 3, கிரீன் 8, ஹெட் ரன்னேதுமின்றி ஆட்டமிழந்தார்கள். 

ஆட்டமிழந்த விரக்தியில் லபுஷேன் 

நிலைத்து நின்று ஆடிய கவாஜா உடன் மார்ஸ் 20 ரன்களுக்கு வெளியேற அலெக்ஸ் கேரி 65 ரன்கள் அடித்து அசத்தினார். 

தற்போது கவாஜா 40, கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். மே.இ.திவுகள் அணியைவிட 148 ரன்கள் ஆஸி. பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கெமர் ரோச், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT