செய்திகள்

தோல்விக்கான காரணம் குறித்துப் பேசிய ரோஹித் சர்மா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 202 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த இடத்தில் தவறு ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. 230 ரன்கள் என்பது அடையக் கூடிய இலக்கு என நினைத்தேன். ஆனால், எங்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. இங்கிலாந்து அணியின் ஆலி போப் சிறப்பாக விளையாடினார். வெற்றி இலக்கை அடைவதற்கு ஏற்றவாறு நாங்கள் பேட்டிங் செய்யவில்லை. இந்திய அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் முன்வரிசை ஆட்டக்காரர்களை விட நன்றாக விளையாடினார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT