செய்திகள்

பல முறை பயிற்சி செய்ததால் இது சாத்தியமானது: ஆலி போப்

இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு அதிகப்படியான பயிற்சி மேற்கொண்டதாக இங்கிலாந்து அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு அதிகப்படியான பயிற்சி மேற்கொண்டதாக இங்கிலாந்து அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில்  இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஆலி போப் 196 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி சவாலான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்க உதவினார். அவர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக அளவிலான ஸ்வீப் ஷாட்டுகளை வெற்றிகரமாக விளையாடினார். 

இந்த நிலையில், இந்தியாவுக்கு வருவதற்கு முன் ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு அதிகப்படியான பயிற்சி மேற்கொண்டதாக இங்கிலாந்து அணியின் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்களது பந்துவீச்சில் அதிக அளவில் தடுத்து விளையாட முற்பட்டால், அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் அவர்களது பந்தினை தடுப்பதைக் காட்டிலும் ஸ்வீப் ஷாட் விளையாடலாம் என முடிவு செய்தேன். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடி போதுமான அளவுக்கு பயிற்சி மேற்கொண்டோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT