செய்திகள்

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்தவராக இருக்கலாம்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். அறிமுக டெஸ்ட்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாக ஸ்டீவ் வாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட் போன்று சிறந்தது ஒன்றுமில்லை. ஷமர் ஜோசப் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்தவராக இருக்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் தனி ஒருவராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கிரிக்கெட் ஆதரவாளர்களுக்கு அதன் மீதான அன்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT