செய்திகள்

இவர்களால் இந்தியாவுக்கு எதிரான வெற்றி சாத்தியமானது: பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு அணியில் இடம்பிடித்துள்ளே சுழற்பந்துவீச்சாளர்களே காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு அணியில் இடம்பிடித்துள்ளே சுழற்பந்துவீச்சாளர்களே காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: சில நேரங்களில் அனுபவமற்ற அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுவும் இந்திய ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது அணிக்கு மிகவும் முக்கியம். இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்கள் எனக் கூறுவதைக் காட்டிலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை புரிந்துகொண்டு அவர்கள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். பந்துவீச்சாளராக ஒருவரது வேலை விக்கெட்டுகளை எடுப்பது. பேட்ஸ்மேனாக ஒருவரது வேலை அணிக்காக ரன்களை குவிப்பது. அதிலிருந்து அதிகமாக எதிர்பார்த்தால் அது நிலைமையை கடினமாக மாற்றிவிடும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT