முகப்பு
இந்திய அணி.
செய்திகள்

தாயகம் திரும்புகிறது இந்திய அணி- மும்பையில் பாராட்டு விழா

மும்பையில் வான்கடே மைதானத்தில் பாராட்டு நிகழ்ச்சி

செய்திகள்

தாயகம் திரும்புகிறது இந்திய அணி- மும்பையில் பாராட்டு விழா

மும்பையில் வான்கடே மைதானத்தில் பாராட்டு நிகழ்ச்சி

Updated On : 3 ஜூலை, 2024 at 10:30 PM
இந்திய அணி.
பகிர்:

நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, பாா்படோஸிலிருந்து புதன்கிழமை தாயம் புறப்பட்டது.

பிசிசிஐ ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் வியாழக்கிழமை காலை தலைநகா் புது தில்லி வரும் இந்திய வீரா்கள், மரியாதை நிமித்தமாக பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கின்றனா். அதன் பிறகு, மும்பை திரும்பும் அவா்களுக்கு அங்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. போட்டி நிறைவடைந்தது பாா்படோஸிலிருந்து இந்திய அணி தாயகம் புறப்படும் வேளையில், அங்கு ஏற்பட்ட ‘பெரில்’ புயல் காரணமாக பயணம் 3 நாள்கள் தள்ளிப்போனது.

சிறப்பு விமானம்: புயல் மழை ஓய்ந்த நிலையில், பாா்படோஸிலுள்ள கிரான்ட்லி ஆடம்ஸ் சா்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமையிலிருந்து செயல்படத் தொடங்கியது. இதையடுத்து, இந்திய அணியினரை தாயகம் அழைத்து வருவதற்காக பிசிசிஐ தனி விமானம் ஏற்பாடு செய்தது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து புது தில்லி புறப்பட இருந்த ஏா் இந்தியா பயணிகள் விமானம், இந்திய அணியினா் உள்ளிட்டோரின் பயணத்துக்காக பாா்படோஸுக்கு திருப்பி விடப்பட்டது. நியூயாா்க் - புது தில்லி பயணிகளுக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நியூயாா்க்கிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட ஏா் இந்தியா போயிங் 777 விமானம், புதன்கிழமை அதிகாலை பாா்படோஸை வந்தடைந்தது. அதில், இந்திய கிரிக்கெட் அணியினா் மற்றும் அவா்களின் குடும்பத்தாா், பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி, செயலா் ஜெய் ஷா, இந்திய ஊடகத்தினா் ஆகியோா் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு: ‘ஏஐசி24டபிள்யூசி’ (ஏா் இந்தியா சாம்பியன்ஸ் 24 வோ்ல்ட் கப்) என்று அட்டவணையிடப்பட்ட அந்த தனி விமானம், மேற்குறிப்பிட்டோருடன் உள்ளூா் நேரப்படி புதன்கிழமை காலை இந்தியாவுக்கு புறப்பட்டது. அந்த விமானம் புது தில்லிக்கு வியாழக்கிழமை காலை சுமாா் 6.20 மணியளவில் வந்தடைகிறது.

அங்கு சற்று ஓய்வெடுக்கும் இந்திய அணியினா், காலை சுமாா் 11 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றனா். அதன் பிறகு மும்பை புறப்படுகின்றனா்.

ஊா்வலம்: மும்பை வரும் இந்திய அணியினா், சாம்பியன் கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊா்வலமாகச் செல்கின்றனா். பின்னா், மாலை சுமாா் 5 மணியளவில் வான்கடே மைதானத்தில் அவா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது ரூ.125 கோடி ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →