டேவிட் வார்னர் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக 110 போட்டிகளில் 1 சதம், 28 அரைசதங்கள் உள்பட 33.43 சராசரி மற்றும் 142.47 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,277 ரன்கள் குவித்துள்ளார். 2011 முதல் 2024 வரை 112 டெஸ்ட் போட்டிகளில், 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்களுடன் 44.59 சராசரியில் 8,786 ரன்கள் எடுத்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 45.30 சராசரியில் 22 சதங்கள் மற்றும் 33 அரை சதங்களுடன் 6,932 ரன்கள் எடுத்துள்ளார்.
நவம்பர் 2023 இல் இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும், ஜனவரியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் அவர் தனது கடைசி போட்டியை விளையாடினார்.
டேவிட் வார்னர் 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பதவி வகித்தார். மேலும், 2016 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணி பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக வார்னர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையுடன் தனது ஓய்வை அறிவித்த வார்னர் தற்போது கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் டேவிட் வார்னர், “எனது கதை முடிந்துவிட்டது. ஆனால் முழுவதுமாக இல்லை. இவ்வளவு காலம் நன்றாக கிரிக்கெட் விளையாடியது மறக்க முடியாத அனுபவம். ஆஸ்திரேலியா எனது அணி. எனது பெரும்பாலனா கிரிக்கெட் வாழ்க்கை சர்வதேச அளவிலேயே இருந்தது. 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அனைத்து வடிவலான கிரிக்கெட் விளையாடியது எனது சிறப்பம்சம்.
உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். சாம்பியன்ஷிப் டிராபிக்கு தேர்வாகினால் அதில் விளையாட தயார்” எனக் கூறியுள்ளார்.
ஜனவரியில் பாட் கம்மின்ஸ், “வேறு யாராவது அவர் இடத்தினை நிரப்ப முயற்சித்து பார்க்க வேண்டும். ஆனால் அவர் இன்னமும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார். தேவைப்பட்டால் அவசரக் காலங்களில் டேவிட் வார்னரை பயன்படுத்தலாம். இல்லையெனிலும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் டேவிட் ரன்கள் குவித்துகொண்டுதான் இருப்பார். அதனால் இதுதான் அவரது கடைசி என நினைக்கக்கூடாது” என்றார்.
8 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஷ் டிராபி மீண்டும் ஐசிசியால் கொண்டுவரப்பட உள்ளது. அநேகமாக அடுத்தாண்டு பிப்.19 -மார்ச் 9 வரை இந்தப் போட்டிகள் நடக்குமென தகவல்கள் தெறிவிக்கின்றன..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.