ராகுல் டிராவிட் 
செய்திகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராகும் டிராவிட்?

தற்போதைய ஆலோசகர் கெளதம் கம்பீர், இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்.

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பணிக்கு ராகுல் டிராவிட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக பெரும் ஏமாற்றம் அளித்த கொல்கத்தா அணியின் ஆலோசகராக இந்தாண்டு கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில், அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் பதவிக்கு சிறந்த வீரரை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வுபெற்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை ஆலோசகர் பணிக்கு நியமிக்க அவருடன் பேச்சுவார்த்தையை கொல்கத்தா அணி நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த காலகட்டத்தில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது மட்டுமின்றி, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாமிடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT