முகப்பு
செய்திகள்

யூரோ: 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து!

யூரோ கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தியது.

Updated On : 11 ஜூலை 2024, 12:14 pm IST
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள். - Martin Meissner
பகிர்:

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக நுழைந்தது. போட்டி வரலாற்றில் பிரான்ஸ், 28 ஆண்டுகளில் முதல் முறையாக அரையிறுதியுடன் வெளியேறியது.

2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நெதர்லாந்து சார்பில் 7ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. பினர் இங்கிலாந்து அபாரமாக ஆடி 18, 90’+1 ஆவது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றி வாகை சூடியது.

Advertisement

Advertisement

இதுவரை யூரோ கோப்பையை வெல்லாத இங்கிலாந்து அணி முதல்முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இறுதிப் போட்டி ஜூலை 15 அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments