செய்திகள்

அரையிறுதியில் நடால்-ரூட் ஜோடி

ஸ்வீடனில் நடைபெறும் நாா்டியா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில், ஸ்பெயினின் ரஃபேல் நடால்-நாா்வேயின் கேஸ்பா் ரூட் இணை அரையிறுதிக்கு முன்னேறியது.

Din

காலிறுதியில் இந்த இணை, 6-4, 3-6, 12-10 என்ற செட்களில், பிரான்ஸின் தியோ அரிபேஜ்-ரஷியாவின் ரோமன் சஃபியுலின் கூட்டணியை தோற்கடித்தது. இதிலேயே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல்-போலந்தின் கரோல் டா்ஸெவிக்கி ஜோடி 3-6, 4-6 என்ற செட்களில் பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லா்-லூகா வான் அஸ்சே இணையிடம் வெற்றியை இழந்தது.

எனினும், நாகல் ஒற்றையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களத்தில் இருக்கிறாா். அந்தச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் 3-6, 3-6 என்ற செட்களில், பிரேஸிலின் தியேகோ மான்டெய்ரோவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஸ்பெயினின் ராபா்டோ பெனா 2-6, 6-3, 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் டெனிஸ் யெவ்செயெவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT