பிவி சிந்து (கோப்புப் படம்) 
செய்திகள்

தங்கப் பதக்கம் வெல்வதே எனது இலக்கு: பிவி சிந்து

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.

DIN

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக வீரர், வீராங்கனைகள் தங்களை தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கில் மூன்றாவது பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட என்னை ஊக்கப்படுத்துகிறது. தங்கப் பதக்கம் வெல்வதே எனது இலக்கு.

ஒலிம்பிக் போட்டிகளில் எனது 200 சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதென்பது சாதரண விஷயம் கிடையாது. தங்கப் பதக்கத்தை இலக்காக கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்கை சந்திக்கிறேன்.

ஒலிம்பிக் மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும். எதிராக விளையாடுபவர்களும் பதக்கத்தை வெல்லும் நோக்கத்தோடு விளையாடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது சாதரண விஷயம் கிடையாது. கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஒலிம்பிக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்யும் ஒரு சிறிய தவறுகூட அனைத்தையும் மாற்றிவிடும் என்றார்.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்ற பிவி சிந்து தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை இலக்காக குறிவைத்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை தவிர்த்து காமன்வெல்த் போட்டிகளிலும் பிவி சிந்து சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், 2018 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றார். ஆசியப் போட்டிகளிலும் அவர் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பிவி சிந்து தங்கப் பதக்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT