சரித் அசலங்கா 
செய்திகள்

டி20: இலங்கை கேப்டன் சரித் அசலங்கா

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இலங்கை அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

பல்லெகெலெ: இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இலங்கை அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் 16 பேர் இடம் பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை டி20 கேப்டனாக இருந்த ஸ்பின் ஆல்}ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, கடந்த மாத டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை தொடக்க நிலையிலேயே வெளியேறியதை அடுத்து ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே கேப்டன்சி அனுபவம் உள்ள அசலங்கா, டி20 அணிக்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டு தொடக்கத்தில் வங்கதேசத்துடனான தொடரின்போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஹசரங்காவுக்கு இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டபோது, அசலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான இலங்கை அணியின் கேப்டனாக இருந்த அசலங்கா தலைமையில், சமீபத்தில் இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை சாம்பியன் ஆனதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான அணியில், ஏஞ்ஜெலோ மேத்யூஸ், தனஞ்ஜெய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, தில்ஷன் மதுஷங்கா போன்ற பிரதான வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இளம் வீரர் சமிண்டு விக்ரமசிங்கே முதல் முறையாக தேசிய அணியில் இணைந்திருக்கிறார்.

இந்தியா } இலங்கை மோதும் டி20 ஆட்டங்கள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளன. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி, திங்கள்கிழமை இரவு இலங்கை சென்றடைந்தது.

அணி விவரம்: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் பெரெரா (வி.கீ.), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (வி.கீ.), தினேஷ் சண்டிமல், கமிண்டு மெண்டிஸ், தசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெலாலகே, மஹீஷ் தீக்ஷனா, சமிண்டு விக்ரமசிங்கே, மதீஷா பதிரானா, நுவன் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT