புராவிடென்ஸ்: டி20 உலகக் கோப்பை போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சேர்க்க, உகாண்டா 16 ஓவர்களில் 58 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
உகாண்டாவுக்கு இது முதல் டி20 உலகக் கோப்பை போட்டியாகும். முன்னதாக டாஸ் வென்ற உகாண்டா, பந்துவீசத் தீர்மானித்தது.
இன்னிங்ûஸ தொடங்கிய ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜர்தான் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கே 154 ரன்கள் சேர்த்தது. இதில் ஜர்தான் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
குர்பாஸ் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 76 ரன்களுக்கு வீழ்ந்தார். எஞ்சியோரில் நஜிபுல்லா ஜர்தான் 2, குல்பதின் நயிப் 4, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ஓவர்கள் முடிவில் முகமது நபி 14, கேப்டன் ரஷீத் கான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உகாண்டா பெளலர்களில், பிரயன் மசாபா, காஸ்மஸ் கியெவுடா ஆகியோர் தலா 2, அல்பேஷ் ரம்ஜனி 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் 184 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய உகாண்டா தரப்பில், ராபின்சன் ஒபுயா 1 சிக்ஸருடன் 14 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ரியாஸத் அலி ஷா 11, ரோனக் படேல் 4, சைமன் செசாஸி 4, ரோஜர் முகாசா 0, தினேஷ் நக்ரனி 6, அல்பேஷ் ரம்ஜனி 0, கேப்டன் பிரயன் மசாபா 0, பிலால் ஹசன் 8, ஹென்றி சென்யோண்டோ 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கடைசி வீரராக காஸ்மஸ் கியெவுடா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி 5, நவீன் உல் ஹக், ரஷீத் கான் ஆகியோர் தலா 2, முஜீப் உர் ரஹ்மான் 1 விக்கெட் எடுத்தனர்.
இன்றைய ஆட்டம்
இந்தியா - அயர்லாந்து
இரவு 8 மணி / நியூயார்க்
நேரலை:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.