ANI
செய்திகள்

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது நியூசிலாந்து!

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

DIN

உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் உலகக் கோப்பை லீக் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறியது.

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள உகாண்டா, பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

லீக் சுற்றில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, இரண்டிலும் தோல்வியை தழுவியது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மொத்தமுள்ள 4 குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT