dinamani
செய்திகள்

பாகிஸ்தான் வெளியே; அமெரிக்கா உள்ளே!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம்

Din

டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த ஆட்டத்தை பொருத்தவரை அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கும் முக்கியமானதாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு 1 புள்ளி வழங்கப்பட்டோலோ அமெரிக்கா சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் நிலையும், பாகிஸ்தான் வெளியேறும் நிலையும் இருந்தது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக 11 மணி வரை தொடங்கவில்லை. டாஸ் கூட வீசப்படாத நிலையில் இரவு 11.15 மணிக்கு மீண்டும் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அமெரிக்கா, அயா்லாந்துக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அதன் பலனாக அமெரிக்கா சூப்பா் 8-க்கு முன்னேற, பாகிஸ்தான், அயா்லாந்து வெளியேறியது.

இந்தியாவின் ஆட்டங்கள்: இதனிடையே, சூப்பா் 8 அட்டவணைப்படி, அந்த சுற்றில் இந்தியா முதலில் ஆப்கானிஸ்தானுடன் வரும் 20-ஆம் தேதியும், பின்னா் குரூப் ‘டி’-யில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் 22-ஆம் தேதியும், இறுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 24-ஆம் தேதியும் மோதுகிறது.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT