‘கோட்’ படத்தின் புகைப்படம்.  
செய்திகள்

‘கோட்’ பட பாணியில் சிஎஸ்கே வெளியிட்ட தோனி-ருதுராஜ் போஸ்டர்!

சிஎஸ்கே அணி நிர்வாகம் விஜய்யின் ‘கோட்’ பட பாணியில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் விஜய்க்கு 50ஆவது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் விடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.

நடிகரும் தவெக தலைவரும் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்து வரும் 68-வது திரைப்படமான ‘கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில், இன்று (ஜூன் 22) நள்ளிரவு 12 மணியளவில் `கோட்’ படத்தின் 50 விநாடி கொண்ட கிளிம்ப்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது.

`கோட்’ கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே சுமார் 10 லட்சத்து 30 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (கோட்) படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் கோட் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் முன்னோட்ட விடியோவில் வந்த விஜய் இரட்டை வேடங்களில் இருக்கும் புகைப்படம் போல சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனி - ருதுராஜ் இருக்கும் புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டுள்ளது.

கோட் பாணியில் தோனி - ருதுராஜ்

சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. விஜய், தோனி, சிஎஸ்கே ரசிகர்களை இந்தப் போஸ்டர் பெரிதும் கவர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT