கம்மின்ஸ் Ramon Espinosa
செய்திகள்

‘ஓவர் கான்ஃபிடன்ஸ்’: வைரலாகும் கம்மின்ஸ் பேட்டி!

உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் ஆஸ்திரேலியா வெளியேற்றம்.

Ravivarma.s

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேற்கத்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது. வங்கதேசத்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, மேற்கத்திய தீவுகள் சூப்பர் 8 சுற்றுடனும், நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடனும் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்தப் பேட்டியில், உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளின் பெயரை கம்மின்ஸிடம் தொகுப்பாளர் கேட்டிருப்பார்.

அதற்கு பதிலளித்த கம்மின்ஸ், “கண்டிப்பாக ஆஸ்திரேலியா செல்லும், மற்ற 3 அணிகள் குறித்து எனக்கு கவலையில்லை, உங்களுக்கு என்ன வேண்டுமோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்திருப்பார்.

தற்போது, கம்மின்ஸின் பேட்டியை பகிர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை டேக் செய்து இணையத்தில் வருத்தெடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT