முகப்பு
செய்திகள்

ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி இங்கிலாந்து வீரர் சாதனை!

ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி இங்கிலாந்து வீரர் சாதனைப் படைத்துள்ளார்.

Updated On : 26 ஜூன், 2024 at 7:33 PM
லூயிஸ் கிம்பர்
பகிர்:

முதல்தரப் போட்டிகளான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் ஒரே ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து, ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான ஆலி ராபின்சன் 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 13-ஓவரில் ஒன்பது பந்துகளில் வீசிய அவர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

30 வயதான ஆலி ராபின்சன், ஹோவில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடந்த பிரிவு இரண்டில் லீசெஸ்டர்ஷைருக்கு எதிராக சசெக்ஸ் அணிக்காக, லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸின் 59-வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்த லூயிஸ் கிம்பர் 56 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்த போது, ​​ஆலி ராபின்சன் ஓவரில் ஒட்டுமொத்தமாக ஐந்து சிக்ஸர்களை அடித்தார்.

ராபின்சனின் 13-வது ஓவரின் முதல் பந்தில் நோபாலில் 6 ரன்கள், ஃப்ரீஹிட்டில் 6 ரன்கள், அடுத்து 4 ரன்கள், 6 ரன்கள், 4 ரன்கள், அடுத்தப் பந்தில் நோபாலில் 6 ரன்கள், ஃப்ரீஹிட்டில் 4 ரன்கள், நோபாலில் 6 ரன்கள், கடைசிப் பந்தில் 1 ரன்னும் எடுத்தார்.

ஆட்டத்தில் ராபின்சன் வீசிய 13-வது ஓவரின் விவரங்கள்: 6, 6, 4, 6, 4, 6 nb, 4, 6nb, 1

வலது கை ஆட்டக்காரரான கிம்பர் 127 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 243 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நேர முடிவில் சசெக்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

1998 ஆம் ஆண்டு சர்ரே மற்றும் லங்காஷயர் போட்டியில் ஆண்ட்ரூ பிளின்டாஃப் எடுத்த 34 ரன்களில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அலெக்ஸ் டியூடரின் 38 ரன் விட்டுக்கொடுத்த சாதனையை முறியடித்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ராபின்சன்.

முழு கட்டுரையைப் படிக்க →