டிராவிஸ் ஹெட்  Ramon Espinosa
செய்திகள்

சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி உலகின் நம்.1 வீரரானார் டிராவிஸ் ஹெட்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

DIN

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 149 ரன்கள் எடுத்துள்ள சூர்யகுமார் யாதவ். சராசரி 29.80, ஸ்டிரைக் ரேட் 139.25ஆக உள்ளது. அதிரடிக்கு பெயர்போன சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தினையே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதுவே வெற்றிக்கு தேவையானதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணி அரையிறுதிக்கு தேர்வாகவில்லை. இதில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 255 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42, ஸ்டிரைக் ரேட் 158 ஆக இருக்கிறது.

இந்த மாற்றத்தினால் டிராவிஸ் ஹெட் ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டி20 தரவரிசையில் அக்டோபர் 30, 2022ஆம் ஆண்டு முதல் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 பேட்டர்கள் தரவரிசைப் பட்டியல்:

1. டிராவிஸ் ஹெட் - 844 புள்ளிகள்

2. சூர்யகுமார் யாதவ் - 842 புள்ளிகள்

3. பிலிப் சால்ட் - 816 புள்ளிகள்

4. பாபர் அஸாம் - 755 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT