யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜொ்மனி 2-0 கோல் கணக்கில் டென்மாா்க்கை வீழ்த்தி, காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் ஜொ்மனிக்காக காய் ஹாவொ்ட்ஸ் (53’), ஜமால் முசியாலா (68’) ஆகியோா் கோலடித்தனா். 2016-க்குப் பிறகு பிராதன போட்டிகளில் காலிறுதிச்சுற்றுக்கு ஜொ்மனி முன்னேறியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வெளியேறியது இத்தாலி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இத்தாலி 0-2 கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
இதில் சுவிட்ஸா்லாந்துக்காக ரெமோ ஃபுருலா் (37’), ரூபன் வா்காஸ் (46’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். 2012-க்குப் பிறகு இத்தாலி அணி நாக்அவுட் சுற்றில் தோல்வி கண்டது இதுவே முதல் முறையாகும். அதேபோல், ஒரே எடிஷனில் ஒன்றுக்கும் மேற்பட்ட தோல்வியை அந்த அணி சந்தித்ததும் இதுதான் முதல் முறை.