ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் Andrew Cornaga
செய்திகள்

கேமரூன் கிரீன் (174*) ருத்ர தாண்டவம்: 179 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டில் ஆஸி. 217 ரன்கள் முன்னையில் இருக்கிறது.

DIN

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டில் ஆஸி. 217 ரன்கள் முன்னையில் இருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸி. 3-0 என அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நியூசி. உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.29) வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பௌலிங்கை தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனியொருவனாக ஆஸி. அணியை தூக்கி நிறுத்தினார் கேமரூன் கிரீன். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 174* ரன்கள் எடுத்தார். அதில் 23 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 71 ரன்களும் மாட் ஹென்றி 42 ரன்களும் எடுத்தனர்.

2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி மோசமான தொடக்கத்தை அளித்தது. ஸ்மித் டக்கவுட்டாக லபுஷேன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ஆம் நாள் முடிவில் கவாஜா 5* ரன்களுடனும் நேதன் லயன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். முதல் டெஸ்ட்டில் ஆஸி. 217 ரன்கள் முன்னையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காத நியூசி. கேப்டன் டிம் சௌதி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT