டெஸ்ட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் ஸ்மித் புதிய சாதனை!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
2010இல் டெஸ்டில் சுழல் பந்து வீச்சாளராக அறிமுகமானவர் ஸ்டீவ் ஸ்மித். பின்னர் தனது அபாரமான பேட்டிங் திறமையினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார்.
108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 9,665 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 இரட்டை சதங்கள், 32 சதங்கள், 41 அரைசதங்கள் அடங்கும். சராசரி 57.53 என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை தொட இருக்கிறார்.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அண்மையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். வார்னருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார்.
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் கலக்கி வருகிறார் 34 வயதான ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கீப்பர் அல்லாத ஒருவர் அதிக கேட்ச்கள் (182) பிடித்தவர்கள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2ஆம் இடம் வகிக்கிறார்.
ஆஸி.இல் அதிக கேட்ச் பிடித்தவர்கள்:
ரிக்கி பாண்டிங்- 196
ஸ்டீவ் ஸ்மித் -182
மார்க் வாக் - 182
சர்வதேச அளவில் அதிக கேட்ச்:
ராகுல் திராவிட் - 210
ஜெயவர்த்னே- 205
ஜாக் காலிஸ் -200
ரிக்கி பாண்டிங் - 196
ஜோ ரூட்- 192
ஸ்டீவ் ஸ்மித் - 182
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.