செய்திகள்

போட்டி ஆரம்பித்த முதல் நாளிலேயே தோற்றுவிட்டோம்: தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர்

அரையிறுதிப் போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் தோற்றுவிட்டோம் என தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் தோற்றுவிட்டோம் என தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி ரஞ்சி கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் மும்பையிடம் இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் தமிழக அணியின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் தோற்றுவிட்டோம் என தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அரையிறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தை பார்த்த தருணத்திலேயே இந்த ஆடுகளத்தில் எங்களால் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியும் என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. காலிறுதிப் போட்டியில் நாங்கள் விளையாடிய ஆடுகளத்தின் தன்மையும் அரையிறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தின் தன்மையும் வெவ்வேறானவை. வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் உள்ள ஆடுகளத்தைப் பார்த்த உடனே இந்தப் போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்தேன்.

நான் எப்போதும் மனதில் தோன்றுவதை நேரடியாக பேசக் கூடியவன். நாங்கள் போட்டி தொடங்கிய முதல் நாள் 9 மணிக்கே தோற்றுவிட்டோம். நாங்கள் முதலில் பந்துவீசியிருக்க வேண்டும். டாஸ் வென்ற போதிலும் நாங்கள் பேட்டிங்கைத் தேர்வு செய்தோம். என்னுடைய கருத்துகளை கூற முடியும். ஆனால், கேப்டன் எடுக்கும் முடிவே இறுதியானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி முதல்வர் Rekha Gupta மீது தாக்குதல்!

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ராஜிவ் காந்தி பிறந்தநாள்! காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை! | Rahul Gandhi | Priyanka Gandhi

அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!

சொக்க வைக்கும் பேரின்பம்... மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT