செய்திகள்

கடைசி டெஸ்ட் ரஜத் படிதாருக்கு இறுதி வாய்ப்பா? என்ன சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா!

DIN

இந்திய அணியில் நடுவரிசை ஆட்டக்காரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ரஜத் படிதாருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 7) தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்த ரஜத் படிதார் அறிமுகப் போட்டிக்குப் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ரஜத் படிதாருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துகொள்ள ரஜத் படிதாருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும். கடைசி டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் விளையாடுவார் எனத் தெரிகிறது. 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் படிதார், இறுதி வாய்ப்பாக கடைசி போட்டியிலும் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. அணி நிர்வாகம் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களை நாம் விமர்சிக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பாஜக அரசின் தோல்வியால் தில்லியில் மாசு அளவு அபாயகரத்தில் உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

SCROLL FOR NEXT