செய்திகள்

100வது டெஸ்ட்டில் அஸ்வின்: குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பு வரவேற்பு!

தமிழக கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

DIN

தமிழக கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போ்ஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் இன்று (மாா்ச் 7) தொடங்கியது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது. 100-ஆவது டெஸ்ட்டில் களம் காணும் 14-ஆவது இந்திய வீரா் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவுப் பரிசு வழங்கிய திராவிட்.

99 போட்டிகளில் 507 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போதைய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

போட்டி துவங்குவதற்கு முன்னதாக அஸ்வினுக்கு நினைவுப் பரிசாக இந்திய அணியின் தொப்பி ராகுல் திராவிட்டால் வழங்கப்பட்டது. அவருடன் அவரது மனைவி, குழந்தைகளும் உடன் இருந்தார்கள். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறன.

குடும்பத்தினருடன் அஸ்வின்.

மேலும் ரோஹித் சர்மா, இந்திய அணியினர் சிறப்பு வரவேற்பும் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT