செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு 10 புள்ளிகளைப் பெற்றுத் தந்தது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவிகிதம் 59.09-ல் இருந்து 62.50 ஆக உயர்ந்து தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணியின் வெற்றி சதவிகிதம் 60-ல் இருந்து 50 ஆக குறைந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் நியூசிலாந்து 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 68.51 சதவிகித வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT