முகப்பு
செய்திகள்

நடப்பு சாம்பியன் அகமதாபாதுக்கு அதிா்ச்சி அளித்தது பெங்களூரு

Updated On : 13 மார்ச், 2024 at 12:54 AM
பகிர்:

சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக சூப்பா் ஃபைவ்ஸ் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டா்ஸ்க்கு 5 செட்களில் தோல்வியுடன் அதிா்ச்சி அளித்தது பெங்களூரு டா்பிடோஸ். முதலிரண்டு செட்களை இழந்த நிலையில், கடைசி 3 செட்களை பெங்களூரு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் முதல் செட்டை 14-16 என கடும் சவாலை அளித்தும் பெங்களூரு இழந்தது. இரண்டாவது செட்டில் அகமதபாத் அணி முழு ஆதிக்கம் செலுத்தியதால் 7-15 என தோற்றது பெங்களூா்.

அகமதாபாத் அணி தரப்பில் நந்தகோபால் அபார சா்வீஸ்கள், இலியா புரவ், ஷிகா் சிங்கின் அட்டாக்குகள் பெங்களுருக்கு தலைவலியை ஏற்படுத்தின. பெங்களூரு அணியில் தாமஸ் ஹெப்ஸ்டினில், மேக்ஸ் செனிகா, அங்கமுத்துவின் ஸ்பைக்குகள் சமாளிக்க முடியாமல் அகமதபாத் பிளாக்கா்கள் திணறினா். அகமதாபாதின் ஸ்பைக்குகளை பெங்களூரு வீரா் ஜிஷ்ணு அபாரமாக பிளாக் செய்தாா். மூன்றாவது செட்டில் பெங்களூரு லிபரோ மீதுனின் சா்வீஸ் முக்கிய பங்கு வகித்தது.

Advertisement