செய்திகள்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஒப்பந்தத்தில் பிரபல விக்கெட் கீப்பர் இல்லை!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் பிரபல விக்கெட் கீப்பரின் பெயர் இடம்பெறவில்லை.

DIN

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் பிரபல விக்கெட் கீப்பரின் பெயர் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2024-25 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் அடங்கிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 20 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜெரால்டு கோட்ஸீ இடம்பெற்றுள்ளார்.

அவருக்கான ஒப்பந்த காலம் 2024-25 முழுமைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான நண்ட்ரே பர்கரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக்கின் பெயர் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக டி காக் அறிவித்தார். இந்த நிலையில், கிரிக்கெட் ஒப்பந்தப் பட்டியலில் டி காக் பெயர் இடம்பெறாதது முக்கியத்துவம் பெறுகிறது.

குயிண்டன் டி காக்

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 594 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் டி காக் மூன்றாமிடம் பிடித்தார். உலகக் கோப்பைத் தொடரில் டி காக் 4 சதங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT