செய்திகள்

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவிருக்கும் 15 பேர் கொண்ட கனடாவின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இதுதான் கனடாவின் முதல் டி20 உலகக் கோப்பை ஆகும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா உடன் கனடாவும் இருக்கின்றன.

ஆல்ரவுண்டர் சாத் பின் ஜாஃபர் கனடாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் பயிற்சியாளர் முன்னாள் இலங்கை வீரர் புபுடு தாஸ்சனநாயகே ஆவார். ஜுன் 1இல் கனடா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

15 பேர் கொண்ட கனடா அணி:

சாத் பின் ஜாஃபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், டிலோன் ஹெய்லிகர், தில்ப்ரீட் பஜ்வா, ஹார்ஷ் தாகேர், ஜெரிமி கார்டோன், ஜுனாய்த் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் டக்கூர், நவ்னீத் தலிவால், நிகோலஸ் கிர்டோன், பரகத் சிங், ரவீந்திரபால் சிங், ராயன்கான் பதான், ஸ்ரேயாஷ் மோவ்வா.

ரிசர்வ் வீரர்கள்:

ஆதித்யா வரதராஜன், அம்மர் காலித், ஜடிந்தர் மதரு, பர்வீன்குமார்.

டிராவலிங் ரிசர்வ்: தஜிந்தர் சிங்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

வெண்மேகம் பெண்ணாக... ஜென்னி!

SCROLL FOR NEXT