படம் | ஐசிசி
செய்திகள்

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (மே 3) வெளியிட்டுள்ளது.

DIN

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (மே 3) வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசையில் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான அணிகளுக்கான (ஒருநாள் மற்றும் டி20) தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியை பொறுத்தவரையில், இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 120 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை இழந்தபோதிலும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (122 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (116 புள்ளிகள்) மற்றும் தென்னாப்பிரிக்கா (112 புள்ளிகள்) அணிகள் உள்ளனர்.

டி20 தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (264 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (257 புள்ளிகள்) மற்றும் இங்கிலாந்து (252 புள்ளிகள்) அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT