சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்று மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய வெற்றி பாபர் அசாமின் தலைமையின் கீழ் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் பெறும் 45-வது வெற்றியாகும்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ள கேப்டன்கள்
பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 45 வெற்றிகள்
பிரியன் மஸாபா (உகாண்டா) - 44 வெற்றிகள்
இயான் மோர்கன் (இங்கிலாந்து) - 42 வெற்றிகள்
அஸ்கர் ஆஃப்கன் (ஆப்கானிஸ்தான்) - 42 வெற்றிகள்
எம்.எஸ்.தோனி (இந்தியா) - 41 வெற்றிகள்
ரோஹித் சர்மா (இந்தியா) - 41 வெற்றிகள்
ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா) - 40 வெற்றிகள்
அஹமது ஃபைஸ் (மலேசியா) - 39 வெற்றிகள்
ஜெர்ஹார்டு எராஸ்மஸ் (நமீபியா) - 38 வெற்றிகள்
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 37 வெற்றிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.