ஓய்வு முடிவு சுனில் சேத்ரிக்கு அமைதியைக் கொடுத்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பரும், இந்திய கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகுவதாக, தனது ஓய்வு முடிவை நேற்று (மே 16) அறிவித்தார். 39 வயதாகும் சுனில் சேத்ரி, ஜூன் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியுடன், தான் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், ஓய்வு முடிவு சுனில் சேத்ரிக்கு அமைதியைக் கொடுத்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பரும், இந்திய கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி பேசியதாவது: சுனில் சேத்ரி மிகச் சிறந்த வீரர். அவரது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்னர் அவரது ஓய்வு முடிவு அறிவிப்பு குறித்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால், இந்த முடிவினால் அவர் அமைதியாக இருப்பார் என நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகி வருகிறேன். அவரது எதிர்காலப் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவர் அன்பானவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.