ஷகின் அஃப்ரிடி (கோப்புப்படம்)  
செய்திகள்

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு தொடர்பாக அதிருப்தியில் இருக்கிறாரா என்பது குறித்து அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளார் ஷகீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு தொடர்பாக அதிருப்தியில் இருக்கிறாரா என்பது குறித்து அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளார் ஷகின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின்போது, பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனையடுத்து, கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஷகின் அஃப்ரிடி நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அண்மையில் பாபர் அசாமை மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமித்தது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. தன்னை கேப்டன் பதவிலிருந்து நீக்கி பாகிஸ்தானின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டதால், ஷகின் அஃப்ரிடி அதிருப்தியில் இருந்ததாகவும் செய்திகள் வலம் வந்தன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்ந்தெடுத்ததிலும், கேப்டன்சி தொடர்பான விவகாரத்திலும் எந்த ஒரு அதிருப்தியும் தனக்கு இல்லை என ஷகின் அஃப்ரிடி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சில நேரங்களில் சின்ன சின்ன ஏற்கமுடியாத விஷயங்கள் குடும்பங்களில் நடப்பது உண்டு. சகோதரர்களிடமும் கூட அதிருப்தி ஏற்படுவதுண்டு. ஆனால், அதுபோன்ற எந்த ஒரு விஷயமும் எங்களது அணியில் இல்லை. எங்களது வீரர்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்களது வேலை நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடி, நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது. நாங்கள் ஒற்றுமையுடன் விளையாடும் நோக்கத்தில் இருக்கிறோம். வாக்குவாதங்களுக்கு இது நேரமில்லை என்றார்.

டி20 உலகக் கோப்பையில் வருகிற ஜூன் 6 ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT