படம் | ஐசிசி
செய்திகள்

டி20 உலகக் கோப்பைத் தூதராக முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், உலகக் கோப்பை விளம்பரத் தூதர்களில் ஒருவராக ஷகித் அஃப்ரிடி இணைந்துள்ளார். ஏற்கனவே, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் தடகள வீரர் உசைன் போல்ட் ஆகியோர் உலகக் கோப்பைத் தொடரின் விளம்பரத் தூதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பட்டியலில் ஷகித் அஃப்ரிடியும் இணைந்துள்ளார்.

உலகக் கோப்பை அறிமுக டி20 தொடரின் தொடர் நாயகனான ஷகித் அஃப்ரிடி, 2009 ஆண்டு உலகக் கோப்பையை வென்றார். 2009 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் (176 ரன்கள்) குவித்த இரண்டாவது வீரராக இருந்தார் அஃப்ரிடி.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தூதராக அறிவிக்கப்பட்டது தொடர்பாக ஷகித் அஃப்ரிடி பேசியதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமான தொடர். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான விளம்பரத் தூதர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முந்தைய உலகக் கோப்பை டி20 தொடர்களைக் காட்டிலும் அதிக அணிகள் மற்றும் அதிக போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்த டி20 உலகக் கோப்பை மிகவும் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. குறிப்பாக, வருகிற ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண ஆவலாக உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூலூர் அருகே கோர விபத்து: பள்ளி ஆசிரியர் பலி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும்: அரசு தரப்பு

துரோகத்தின் நினைவுச் சின்னம்... ஃபிஃபா-வை விமர்சிக்கும் கால்பந்து ஆதரவாளர்கள்!

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

பங்குச்சந்தை: 26,000 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

SCROLL FOR NEXT