ஷகிப் அல் ஹசன் (கோப்புப்படம்) 
செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் தோல்வி வங்கதேசத்துக்கான எச்சரிக்கை: ஷகிப் அல் ஹசன்

அமெரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தது வங்கதேச அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார்.

DIN

அமெரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தது வங்கதேச அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேசம் அமெரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தது வங்கதேச அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அமெரிக்காவுக்கு எதிரான இந்த டி20 தொடர் இழப்பு உண்மையில் மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. நாங்கள் இந்தத் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அணி விளையாடிய விதத்தை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் இரண்டு போட்டிகளில் தோல்வியடைவோம் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு அணியாக போட்டிகளில் தோல்வி ஏற்படுவது கண்டிப்பாக ஏமாற்றத்தை அளிக்கும். உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது.

உலகக் கோப்பைக்கு முன்னர் ஏற்பட்டுள்ள இந்த டி20 தொடர் இழப்பு, வங்கதேச அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. நாங்கள் விளையாட நினைத்தபடி, இந்தத் தொடரில் விளையாடவில்லை. இந்தத் தோல்விக்கு அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நான் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது தனிப்பட்ட துறையையோ குறை கூற விரும்பவில்லை.

டி20 போட்டிகளில் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாக செயல்பட வேண்டும். டி20 போட்டிகளில் சிறிய அணி, பெரிய அணி என்பதெல்லாம் கிடையாது. அதன் காரணமாகவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் டி20 போட்டிகள் சுவாரசியமாக உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT