ரித்திமான் சாஹா (கோப்புப் படம்) X | Wriddhiman Saha
செய்திகள்

ஓய்வு பெறுகிறாா் ரித்திமான் சாஹா!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பா் - பேட்டா் ரித்திமான் சாஹா (40), ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளாா்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பா் - பேட்டா் ரித்திமான் சாஹா (40), ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளாா்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிவரும் அவா், நடப்பு சீசனுடன் விடைபெறப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவா் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘நினைவில் நிற்கக் கூடிய வகையிலான ஒரு கிரிக்கெட் பயணத்தை, நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை போட்டியுடன் நிறைவு செய்கிறேன். அந்தப் போட்டியில் பெங்கால் அணிக்காக கடைசியாக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

இந்திய அணிக்காக 40 டெஸ்ட்டுகளில் 1,353 ரன்கள் சோ்த்துள்ள சாஹா, 9 ஒருநாள் ஆட்டங்களில் 41 ரன்கள் அடித்திருக்கிறாா். டெஸ்ட்டில் அவரின் அதிகபட்ச ஸ்கோா் 117. அந்த ஃபாா்மட்டில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் விளாசியிருக்கும் சாஹா, கீப்பராக சாய்த்துள்ள 104 விக்கெட்டுகளில், 92 கேட்ச்கள் அடங்கும்.

இதுதவிர, ரஞ்சி கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவா், முதல்தர கிரிக்கெட்டில் 7,013 ரன்கள் அடித்திருக்கிறாா். அதில் 14 சதங்கள், 43 அரைசதங்களும் விளாசியிருக்கிறாா்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப், ஹைதராபாத், குஜராத் அணிகளுக்காகவும் அவா் விளையாடியிருக்கிறாா். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தற்போது அவா் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

SCROLL FOR NEXT