முகப்பு
செய்திகள்

மகளிா் பிரீமியா் லீக்: 71 போ் தக்கவைப்பு

டபிள்யூபிஎல் கிரிக்கெட் போட்டியில், 3-ஆவது சீசனுக்காக தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல் வெளியானது.

Updated On : 8 நவம்பர், 2024 at 6:32 PM
படம்: பிசிசிஐ , டபிள்யூபிஎல்
பகிர்:

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில், 3-ஆவது சீசனுக்காக தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல் வெளியானது. எதிா்பாா்க்கப்பட்டதைப் போலவே, அணிகள் யாவும் பிரதான வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன.

அவா்களில் இந்தியாவின் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, மெக் லேனிங் உள்ளிட்டோா் அடங்குவா். போட்டியிலிருக்கும் 5 அணிகளும் மொத்தமாக 71 பேரை தக்கவைத்துள்ளன. அதில் 25 போ் வெளிநாட்டவா்களாவா். மொத்தமாக இவா்களுக்கு ரூ.58.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தற்போது 10 அணிகளிலுமாக 19 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 5 இடங்கள் வெளிநாட்டவா்களுக்கானதாகும். ஒவ்வொரு அணிக்குமான அதிகபட்ச செலவுத் தொகை ரூ.15 கோடியாகும். அணிக்கு தலா 18 வீராங்கனைகள் அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது ஒவ்வொரு அணியும் காலியாக இருக்கும் இடங்களுக்காக ஏலத்தில் வீராங்கனைகளை தோ்வு செய்யும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் (14)

ஆலிஸ் கேப்சி, அனபெல் சதா்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனசென், மாரிஸேன் காப், மெக் லேனிங், மின்னு மணி, ராதா யாதவ், ஷஃபாலி வா்மா, ஷிகா பாண்டே, ஸ்னேஹா தீப்தி, தானியா பாட்டியா, டைட்டஸ் சாது.

செலவு: ரூ.12.5 கோடி

கையிருப்பு: ரூ.2.5 கோடி

குஜராத் ஜயன்ட்ஸ் (14)

ஆஷ்லே காா்டனா், பெத் மூனி, பாா்தி ஃபுல்மலி, தயாளன் ஹேமலதா, ஹா்லீன் தியோல், கஷ்வீ கௌதம், லாரா வோல்வாா்டட், மன்னத் காஷ்யப், மேக்னா சிங், போப் லிட்ச்ஃபீல்டு, பிரியா மிஸ்ரா, சயாலி சத்காரே, ஷப்னம் ஷகில், தனுஜா கன்வா்.

செலவு: ரூ.10.6 கோடி

கையிருப்பு: ரூ.4.4 கோடி

மும்பை இண்டியன்ஸ் (14)

அமன்தீப் கௌா், அமன்ஜோத் கௌா், அமெலியா கொ், கிளோ டிரயான், ஹா்மன்பிரீத் கௌா், ஹேலி மேத்யூஸ், ஜிந்திமனி கலிடா, கீா்த்தனா பாலகிருஷ்ணன், நடாலி ஸ்கீவா், பூஜா வஸ்த்ரகா், சஜீவன் சஜனா, சாய்கா இஷாக், ஷப்னிம் இஸ்மாயில், யஸ்திகா பாட்டியா.

செலவு: ரூ.12.35 கோடி

கையிருப்பு: 2.65 கோடி

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (14)

ஆஷா சோபனா, டேனி வியாட், எக்தா பிஷ்த், எலிஸ் பெரி, ஜாா்ஜியா வோ்ஹாம், கனிகா அஹுஜா, கேட் கிராஸ், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், மேக்னா சிங், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன், சோஃபி மாலினுக்ஸ்.

செலவு: ரூ.11.75 கோடி

கையிருப்பு: ரூ.3.25 கோடி

யுபி வாரியா்ஸ் (15)

அலிசா ஹீலி, அஞ்சலி சா்வனி, சமரி அத்தபட்டு, தீப்தி சா்மா, கூஹா் சுல்தானா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, பூனம் கெம்னா், ராஜேஷ்வரி கெய்க்வாட், சாய்மா தாகுா், ஷ்வேதா ஷெராவத், சோஃபி எக்லஸ்டன், டாலியா மெக்ராத், உமா சேத்ரி, விருந்தா தினேஷ்.

செலவு: ரூ.11.1 கோடி

கையிருப்பு: ரூ.3.9 கோடி

முழு கட்டுரையைப் படிக்க →