டேவிஸ் கோப்பையை தூக்கி கொண்டாடிய யானிக் சின்னருடன் இத்தாலி வீரர்கள்.  படம்: எக்ஸ் / டேவிஸ் கோப்பை
செய்திகள்

சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!

ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பையை இத்தாலி அணி 3ஆவது முறையாக வென்று அசத்தியது.

DIN

ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ஷுல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரஃபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரரான யானிக் சின்னா் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார்.

கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதா்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது.

இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் இத்தாலி சாம்பியனாகியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

இந்தாண்டு 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றது, டென்னிஸ் தரவரிசையில் நம்.1 இடத்தில் நீடிப்பது, ஏடிபி ஃபைனல்ஸ் என அனைத்தும் இந்தாண்டு சிறப்பான ஆண்டாக சின்னருக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

SCROLL FOR NEXT